Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தலைவர் பிரபாகரன் குறித்து மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன கூறியது

தலைவர் பிரபாகரன் குறித்து மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன கூறியது

3 minutes read

தமிழ்தேசத்தின் மீதான் இனவழிப்பு யுத்தத்தை வழி நடத்திய தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன பினான்சியல் ரைம்ஸ்க்கு வழங்கிய பேட்டி ஒன்றில் ‘இராணுவத்தினாரால் கைப்பற்றப்ட்ட பிரபாகரனினதும் அவரது குடும்பத்தினரதும் விடுதலைப்புலிகளின் நிகழ்வுகளிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாங்கள் நான்கு ஆராய்தோம் அந்த 10,000க்கும் மேற்பட்ட ஒளிப்படங்களில் ஒன்றில் கூட மதுக்குவளையுடன் பிரபாகரனைக் காணவில்லை . பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம் ஆனால் அவர் தனக்குள்ளேயும் தன்னைச் சுற்றியும் கடுமையான ஒழுக்கத்தைப் பேணினார். அவர் ஒரு அன்பான குடும்ப மனிதாராக காணப்பட்டார். அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர் பலரும் கற்றுக்கொள்ள வேண்டியபல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தன. ஆவர் உறுதியான முடிவை எடுப்பவராக இருந்தார். என்று கூறிப்பிட்டிருந்தார்.

தலைவர் பிரபாகரனை ஒரு பிழையானவராக அல்லது சலுகைகளுக்கும் தன்னுடைய குடும்பத்தின் தேவைகளுக்கும் யாரிடமும் விலைபோன ஒரு நபராக யாராலும் எந்த காலத்திலும் சித்தரிக்க முடியாது என்பதற்கு ஒரு எதிரியில் இவ் கருத்தும் ஒர் சான்று.

இதே போல் தேசத்தின் குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்கள் தனது போரும் சமாதானமு; என்ற புத்தகத்தில் தன்னுடைய மருத்துவத்திற்காக தன்னை வெளிநாடு ஒன்றுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கு முயற்சித்த வேளையில் அப்போது இருந்த சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் அன்ரன் பாலசிங்கம் அவர்களைக் கொண்டு செல்வதற்கு பல நிபந்தனைகளை விடுதலைப்புலிகள் மீது விதித்த போது அதற்கு அடிபணியாமல் தமிழ்த்தேசத்தின் மதியுரைஞரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கொள்கைகளை அடகு வைக்காமல் அன்ரன் பாலசிங்கம் அவர்களை வேறு விதமாக வெளிநாட்டு ஒன்றுக்கு அனுப்பிவைத்தார் என்பதும் வரலாறு.

Image may contain: 1 person, closeup and indoor

அக சிங்கள தேசத்திற்கு ஒரு முகத்தையும் தமிழ்த் தேசத்திற்கு ஒரு முகத்தையும் காட்டாமல் ஒரு நேர்மையாளனாக புனிதாரக உத்தம மனிதராக வாழ்ந்தவர் எமது தேசியத்தலைவர்.
தனக்காகவோ தனது மக்களுக்காகவோ அல்லது தன்னுடைய பிள்ளைகளுக்காகவோ தன்னுடைய இலட்சியத்தை தாரைவார்க்காமல் சலுகைகளைப் பெற்றுகொண்டு வாழமால் தன்னுடைய பிள்ளைகளையும் சாதாரண பிள்ளைகளைப் போல் இந்த இனவிடுதலைப்போராட்டத்திற்காக மாவீரார்களாய் அர்பணித்து எங்குமில்லாத ஒரு வரலாற்றாய் வாழ்ந்தவர்.

அவர் நேர்மையாளனாக உத்தமனகா வாழ்ந்தால் தான் ஒரு உண்மையான தலைவனாக எதற்கும் விலைபோகாதவனகா வாழ்ந்தபடியால் தான் அவர் உரிமைகளை சிங்களதேசத்திடம் பல வடிவங்களில் கேட்ட போது எந்த ஒரு சிங்கள தேசத்தின் எந்த நபரும் உங்களைப்பற்றிய விடயங்களை வெளிப்படுத்துவோம் என்று பயமுறுத்தவில்லை.

ஆனால் இன்று சிங்கள தேசத்தின் ஒரு சின்னப் பெடியன் தமிழர் சரித்திரத்தின் பெரும் தலைவர் என்று கூறிக்கொள்பவரை அச்சுறுத்துகின்றார். உங்களைப் பற்றிய விடயங்கள் அனைத்தும் வெளியிடுவேன் என்று. இந் நிலையில் அத்தலைவர் ஏதுசெய்வார்? நாம் உரிமைகளைப் பெற்றுதருவோம் என்று கூறிக்கொண்டு தங்கள் இனம் சார்ந்த உரிமைகளைப் பெற்றுக்கொடுக்காமல் தான் சார்ந்த தங்கள் குடும்பநலன் சார்ந்த சலுகைகளைப் கேட்டுப் பெற்றுக்கொண்டால் இப்படியான நிலை தான் உருவாகும் என்பதற்கு இது சான்று.

இவ்வாறு உரிமையின் பெயரைச் சொல்லிக் கொண்டு அதனை உரக்க முழங்கிக்கொண்டு தான் தன் குடும்ப நலம் சார்ந்த வசதிகளையும் தேவைகளையும் கேட்டுப் பெற்றுக்கொண்டு சலுகைகளுக்கு அடிபணிந்து தங்களை தமிழ்த் தலைவர்களாக, தளபதிகளாக, கொள்கைவாதிகளாக நினைப்பவர்களும் அவர்களை தலைவர், எங்கள் தளபதி என்று பதிவிடுபவர்களும் ஒரு கணம் தமிழ்த்தேச விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றுப்பக்கங்களையும் தலைவர் பிரபாகரனை மட்டுமல்ல ,உண்மையான இனவிடுதலைப்போராடத்தில் போராடிய ஒரு போராளியின் சலுகைகள் அற்ற உரிமைப்போராட்டத்தின் தாற்பரியத்தை புரிந்து கொண்டு பதிவிடுங்கள்

தலைவர் பிரபாரகரன் சலுகைகளுக்கு விலைபோகமால் ஒரு உண்மையான தமிழ்த்தேசத்தின் தலைமகனாக வாழ்ந்தபடியால் யுத்தக்களத்தில் கொடிய யுத்தம் புரிந்த எதிரியும் பாராட்டினான்.
இன்று தங்களை தலைவர்கள் தளபதிகள் என்று சொல்லிக் கொண்டு சலுகைகளுக்கு விலைபோனதால் தான் சிங்கள தேசத்தின் ஒரு சின்னப்பெடியன் சின்னவியடத்திற்கே கதைத்தால் வெளிப்படுத்துவேன் என்று வெருட்டுகின்ற நிலை உருவாகியுள்ளது.

சிங்கள தேசத்தின் ஓரு சின்னப்பெடியனைப் பற்றி தவறாக கதைத்தாலே, அந்த சின்னப்பெடியன் கதைத்தால் வெளிப்படுத்துவேன் என்று வெருட்டும் நிலையிலும் வெருண்டு போகும் நிலையிலும் இருக்கின்ற தமிழ்த் தலைமைகள் எவ்வாறு அந்த சின்னப்பெடியன் வாழுகின்ற சிங்கள தேசத்திடம் பேரம் பேசி உரிமைகளைப்பெற்றுத் தரப்போகின்றார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆக தங்களுடைய நலன்களுக்காகவும் தங்களுடைய குடும்ப நலன்களுக்காகவும் சலுகைகளுக்காகவும் சிங்கள அரசுகளிடமும் அதன் பிராந்திர வல்லரசுகளிடமும் கொத்தடிமைகள் ஆக்கப்பட்ட அல்லது ஆகிய தமிழ்த் தலைமைகள் தமிழ்மக்கள் விரும்புகின்ற எந்த ஒரு தீர்வையும் பெற்றுத் தரமாட்டாhகள் என்பது வெளிப்படை

எங்களுக்கு இன்னமும் ஆற்றலும் ஆளுமையும் உள்ள ஒரு தமிழ்த் தலைமை தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பிற்பாடு இல்லை என்பதனை பகீரங்கமாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அது மட்டுமே ஆற்றல் உள்ள ஆளுமை உள்ள தலைமை. இப்போது இருப்பது எல்லாம் தமிழர்களின் அடையாளத் தலைமை தான். அவர்களுக்கு ஆற்றல் இல்லை ஆளுமை இல்லை என்கின்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றக்கொண்டே ஆக வேண்டும்.

வரதராஜன் பார்த்திபன்
யாழ்.மாநகர சபை உறுப்பினர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More