இந்திய பாகிஸ்தான் வெங்காயம் இறக்குமதி.

இந்தியாவிலிருந்து பத்தாயிரம் மெற்றிக் தொன்னும், பாகிஸ்தானிலிருந்து 750 மெற்றிக் தொன் பெரிய வெங்காயம் எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்த நாடுகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு அமைய இவ்வாறு பெரிய வெங்காயம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறைவடைந்தது. சதொஸ நிறுவனத்தில் தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆசிரியர்