நாடளாவிய ரீதியில் மருந்தகங்களை திறப்பதற்கு 05 மணி வரை அனுமதி.

அத்தியாவசிய சேவைக்கான ஜனாதிபதி செயலணியினால் இன்று காலை 09 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை நாடளாவிய ரீதியில் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 இந்த தீர்மானம்நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து ஆயுர்வேத மருந்தகங்களையும் , ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் திறப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பிரதேச செயலாக பிரிவுகளிலும் ஒரு மருந்தகம் அல்லது நடமாடும் சேவைக்கு அனுமதி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொத்தமல்லி, இஞ்சி, வெனிவேல் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கும் , ஆயுர்வேத சிகிச்சைகளை பெறுவோருக்கு வீடுகளுக்கே மருந்துகளை அனுப்புவதற்கும் அத்தியாவசிய சேவைக்கான ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்