Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 5 மணி நேரத்திற்கும் அதிக நேரம் வீடியோ விளையாட்டுஉயிரை பறித்த விபரீதம்.

5 மணி நேரத்திற்கும் அதிக நேரம் வீடியோ விளையாட்டுஉயிரை பறித்த விபரீதம்.

1 minutes read

தனது கையடக்க தொலைபேசியில் 5 மணி நேரத்திற்கும் அதிக நேரம்  வீடியோ விளையாட்டு விளையாடிக் கொண்டிரு்தவர் மூளையின் நரம்பு வெடித்து உயிரிழந்துள்ளார்.கொழும்பு, கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் கடந்த 29ஆம் திகதி இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை அறையில் தனது கையடக்க தொலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மரணம் தொடர்பில் திடீர் மரண பரிசோதகர் இரேஷா தேஷானி முன்னால் இடம்பெற்ற மரண பரிசோதனையின் போது அவரது 30வயதுடைய மனைவி ஆனந்தன் தர்ஷிகா என்பவரே இவ்வாறு சாட்சியளித்துள்ளார்.

இரவு 9 மணியளவில் தனது கையடக்க தொலைபேசியில் விளையாடி கொண்டிருந்ததனை நான் அவதானித்தேன்.அதனை நிறுத்தி விட்டு உறங்குமாறு நான் கூறினேன். அதை கேட்காமல் விளையாடிக் கொண்ணடிருந்தார்.அடுத்த நாள் அதிகாலை இரண்டு மணியளவில் திடீரென சத்தம் ஒன்று கேட்டது. அங்கு சென்று பார்த்த போது மூக்கு, வாயில் இரத்தம் வடிந்த நிலையில் கணவர் விழுந்து கிடந்தார். உடனே அம்பியுலன்ஸ் வண்டிக்கு அழைப்பேற்படுத்தி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம் அது வரையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More