செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வீரவன்சவின் மனைவிக்கு பிடியாணை!

வீரவன்சவின் மனைவிக்கு பிடியாணை!

0 minutes read

அமைச்சர் விமல் வீரவன்சாவின் மனைவி சஷி வீரவன்சாவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச் சீட்டு மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டு தொடர்பாக சஷி வீரவன்ச மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை அடிப்படையாக கொண்டே பிடியாணை உத்தரவினை கொழும்பு, தலைமை நீதிவான் லங்கா ஜயரட்ண பிறப்பித்தார்.

அத்துடன் இந்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் இராஜதந்திர கடவுச்சீட்டு உட்பட இரண்டு கடவுச்சீட்டுகளை மோசடியாகப் பெற்றதாக சஷி வீரவன்சா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டை பெறுவதற்காக போலி பெயர்கள் மற்றும் பிறந்த திகதிகள் அடங்கிய ஆவணங்களை சமர்ப்பித்த அவர் ஆரம்பத்தில் 2015 பெப்ரவரியில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.