செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் மின்சாரம் இல்லாது எழுனூற்றுக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள்

கிளிநொச்சியில் மின்சாரம் இல்லாது எழுனூற்றுக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள்

1 minutes read

கிளிநொச்சியில்   பல வருடங்களாக மின்சாரம் இல்லாது வசித்து வரும் எழுனூற்றுக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் தமது பதிவுகளை மெற்கொண்டுள்ளனர்

இலங்கை தமிழரசுக் கட்சி பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராஜா அவர்களில் ஏற்ப்பாட்டில் கிளிநொச்சி மாவட்டடத்தில் மின்சாரம் இல்லாத குடும்பங்களின் பதிவுகள் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட போதே பல வருடங்களாக மின்சாரம் இல்லாது வசித்து வரும் எழுனூற்றுக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் தமது பதிவுகளை வழங்கியுள்ளனர்

 தற்போது இலங்கை மின்சார சபையினால் இலவச இணைப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் புதிதாக மின் இணைப்பினைப் பெறுபவர்கள் இணைப்புக் கட்டணமாக ரூபா 20650.00 இனை செலுத்த வேண்டும் இவற்றை செலுத்தி மின் இணைப்பை பெற முடியாமல் பல குடும்பங்கள் கிளிநொச்சியில் வசித்து வருகின்ற நிலையிலையே இன்று இப் பதிவுகள் எடுக்கப்பட்டுள்ளது

இவர்களுக்கான மின் இனைப்புக்கள் பெண் தலமைத்துவ குடும்பங்கள் , பாடசாலை மாணவர்கள் உள்ள குடும்பங்கள் ,மாற்றுத்திரனாளிகள் உள்ள குடும்பங்கள், என தர வரிசைப்படுத்தப்பட்டு தர வரிசையின் அடிப்படையில் கட்டம் கட்டமாக மின்சாரம் வழங்கப்பட உள்ளது

இவ் மின்சாரம் பெறுபவர்கள் இலங்கை மின்சார சபையில் தமது பதிவுகளை வழங்கி அனைத்து ஆவனங்களும் சமர்பிக்கப்பட்ட நிலையில் உள்ள குடும்பங்களுக்கு இணைப்பிற்கான பணத்தினை இலவசமாக பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராஜா தனது சொந்த நிதியில் இருந்தும் புலம்பெயர் தமிழ்த் தொண்டர் நிறுவனங்களின் நிதி உதவியிலும் செய்வதற்கான பதிவுகளே இன்று மேற்கொள்ளப்பட்டுளது இன்றைய தினம் பதிவுகளை மெற்கொண்ட வர்களில் தரவரிசைப் படி இலவசமாக அவர்களுக்கான இணைப்புப் பணத்தினை செலுத்தும் செயற்திட்டம் மட்டுமே இதற்கான இனைப்பினை மின்சார சபையே வழங்கும்

அத்துடன் பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராஜா கடந்த சில மாதங்களுக்குள் மட்டும் புலம்பெயர் தமிழ்த் தொண்டர் நிறுவனம் ஒன்றின் நிதிப் பங்களிப்பிலும் தனது சொந்த நிதியிலும் 73 குடும்பங்களுக்கு தலா 20650.00 ரூபா வீதம் இணைப்புப் பணத்தினை செலுத்தி மின் இனைப்பினை பெற்றுக் கொடுத்துள்ளதுடன் இன்றும் தெரிவு செய்யப்பட்ட 30 குடும்பங்களுக்கான இணைப்புப் பணத்தினை செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.