செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெளி மாவட்ட யாசகர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை

வெளி மாவட்ட யாசகர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை

1 minutes read

கொவிட் – 19இன் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா இளைஞரணித் தலைவரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினருமான விக்டர்ராஜினால் வெளிமாவட்ட யாசகர்கள் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் மற்றும் வவுனியா பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.சுபாஜினி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து வெளி மாவட்டத்தில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து யாசகம் செய்யும் நிலையில் குடியிருப்பு குளக்கரைப் பகுதியில் தங்கியிருந்த குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 10 பேரை சந்தித்த மேற்படி உறுப்பினர்கள், அவர்களுடைய பிரச்சினைகள், தேவைகள் குறித்து கலந்துரையாடியதுடன், அவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன் யாசகத்தில் ஈடுபட்ட வவுனியாவைச் சேர்ந்த ஒருவருக்கு ஆடைகள் வழங்கப்பட்டு அவருக்கான காணியும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் விக்டர்ராஜ் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.