செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விவேகானந்தரின் பிறந்ததினத்தை அனுஷ்டிக்க வவுனியாவில் தடை

விவேகானந்தரின் பிறந்ததினத்தை அனுஷ்டிக்க வவுனியாவில் தடை

0 minutes read

சுவாமி விவேகானந்தரின் 158ஆவது பிறந்ததினத்தை அனுஷ்டிக்க சுகாதார தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவுத் தூபியினை நகரசபையினர் சுத்தம் செய்து இன்று (செவ்வாய்க்கிழமை) பிறந்தநாளை அனுஷ்டிப்பதற்குறிய ஏற்பாடுகளை முன்னெடுத்த போதிலும் அதற்கு சுகாதார பிரிவினர் தடை விதித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 124 ஆக அதிகரித்துள்ளமையினால், சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நிகழ்வினை நடத்த சுகாதார பிரிவினர் தடையுத்தரவு பிறப்பித்தனர்.

இந்த நிலையில், தடையுத்தரவை மீறி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டால், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவீர்கள் எனவும் உத்தர பிறப்பித்துள்ளனர்.

இதன் காரணமாக இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெறவிருந்த சுவாமி விவேகானந்தரின் 158வது பிறந்ததின நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.