செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

யாழில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

0 minutes read

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் பெருமளவு கோடா மற்றும் கசிப்பு என்பன மீட்டப்பட்டுள்ளது.

சாவகச்சேரி மதுவரித் நிலையத்தினருக்கு நேற்று (வியாழக்கிழமை) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கொடிகாமம், கெற்பொலிப் பகுதியில் மதுவரி உதவி ஆணையாளர் பிரபாத் ஜெயவிக்கிரமவின் ஆலோசனைக்கமைய மதுவரிஅத்தியட்சகர் தங்கராசாவின் வழிநடத்தலில் சாவகச்சேரி மதுவரி நிலைய பொறுப்பதிகாரி அசோகரத்தினம் தலைமையிலான குழுவினர் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது 700 லிட்டர் கோடா, ஆறு லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளது. கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்ற நிலையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.