செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி உடன்பாடு?

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி உடன்பாடு?

0 minutes read

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறு இணக்கம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமரின் பெருந்தோட்டத்துறைக்கான இணைப்புச் செயலயாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவருமான செந்தில் தொண்டமான் ஊடகமொன்றுக்கு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த செயலணியில் தமிழ் பிரதிநிதிகள் யாரும் உள்ளடக்கப்படவில்லை. இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக பெருமளவில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.