செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். மாவட்டத்தில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ். மாவட்டத்தில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

1 minutes read

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவு தொற்றுக்குள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையம் பொறுப்பு வைத்திய அதிகாரி ம அரவிந்தன் தெரிவித்தார் .

இன்று (திங்கட்கிழமை) தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்நீரிழிவு சிகிச்சை முகாதினை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “யாழ் மாவட்டத்தைப் பொருத்தவரை தற்போது நீரிழிவு நோய் என்பது பெரும் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது குறிப்பாக இளவயதினர் சேர்ந்தவர்களுக்கு இந்த நீரிழிவு நோயானது அதிகமாக காணப்படுகின்றது.

இந்த நோய்த் தாக்கத்திற்குள்ளாகும் எதிர்காலத்தில் பல பாதிப்புகள் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது குறிப்பாக இந்த நீரிழிவு நோய் தொற்றுக்கு உள்ளாகுவோருக்கு ஏனைய பல தொற்றுநோய்களும் ஏற்படுவதற்கான சான்றுகள் உள்ளன குறிப்பாக பாரிசவாதம் மற்றும் ஏனைய பல தொற்று நோய்கள் ஏற்படகூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன எனவே இளவயதினர் குறித்த நீரிழிவு நோய் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.

குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் அல்லது ந தகுந்த வேளைகளில் நீரிழிவு பரிசோதனையை மேற்கொண்டு ஆரம்பத்தில் இந்த நீரிழிவு நோயினை இனங்காணும் பட்சத்தில் அந்த நோயை குணமாக்க முடியும் அல்லது நோய் தொற்று காணப்பட்டால் அதனை முறையாக பின்பற்றி குணப்படுத்த முடியும் எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவுநோய் தொடர்பில் பொதுமக்கள் சற்று அவதானமாக செயற்பட வேண்டும் என அவர தெரிவித்தார்.

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நீரிழிவு கழகம் யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து செயற்படுத்தும் நீரிழிவு சிகிச்சை முகாம் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது

யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இடம்பெறும் நீரிழிவு சிகிச்சை முகாமினை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த சத்தியமூர்த்தி மற்றும் மற்றும் நீரிழிவு சிகிச்சை நிலைய வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன் ஆகியோர் ஆரம்பித்து வைத்ததோடு யாழ் நீரிழிவு கழகத்தின் தலைவர் தி. மைக்கல், செயலாளர் க. கணபதி மற்றும் நீரிழிவு கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் குறித்த நீரிழிவு சிகிச்சை முகாமில் பொதுமக்கள் நீரிழிவு பரிசோதனையினை மேற்கொண்டுள்ளமை”குறிப்பிடத்தக்கது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.