செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம்!

0 minutes read

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ். மாவட்ட செயலகம் மற்றும் ஏ9 வீதியை முடக்கி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான மூன்று வாயில்களையும் முடக்கி இன்று (வியாழக்கிழமை) காலை முதல் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தினர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்ய கோரியும் உயிரிழந்த இரண்டு மீனவர்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்காரணமாக பொலிஸார் மற்றும் போக்குவரத்து பொலிஸார் ஏ9 வீதி ஊடாக வருகின்ற வாகனங்களை மாற்று பாதையில் செல்லுமாறு கூறி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.