Sunday, June 26, 2022

இதையும் படிங்க

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கவுள்ள 11 சுயாதீனமாக கட்சிகள்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 11 அரசியல் கட்சிகள் ஒன்றினைத்து எதிர்வரும் மாதம் புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் புதிய சுற்றறிக்கை

அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், மறுஅறிவித்தல் வரும் வரை, அன்றாட சேவைகளுக்கு தேவையான அத்தியாவசிய...

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் தீ விபத்து

யாழ். தெல்லிப்பளை ஆதார  வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பளை...

நாளை முதல் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு

எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு நாளை திங்கட்கிழமை முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்கள் மின் விநியோக துண்டிப்பை நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபைக்கு...

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமில் ஜெவ்றி வெண்டர்சே 

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாத்தில் சுழல் பந்துவீச்சாளர் ஜெவ்றி வெண்டர்சே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

‘ஜனாதிபதி கோட்டா’ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேச ஒத்துழைப்பும் கிடைக்காது | கலாநிதி தயான்

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் கிடைப்பதில் சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று இராஜதந்திரி கலாநிதி.தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்

அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை விபரம்

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக, இன்று (24) அதிகாலை ஒரே தடவையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டது.

இனிவரும் காலத்திலும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை விலைச்சூத்திரத்திற்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தினால் பல்வேறு துறையினர் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நேற்று (23) இரவு முதல் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு அதிகரிக்கப்பட்ட புதிய விலையிலேயே எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்பட்டது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமும் IOC நிறுவனமும் ஒரே தடவையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்தன.

அதற்கமைய, 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 82 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன், அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 77 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 450 ரூபாவாகும்.

ஒட்டோ டீசலின் விலை 111 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 400 ரூபாவாகும்.

சுப்பர் டீசலின் விலை 116 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 445 ரூபாவாகும்.

எரிபொருள் தொடர்பிலான விலைச்சூத்திரம் ஒன்று நேற்று புதிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அமைச்சரவை அனுமதி பெறப்பட்டது.

விலைச்சூத்திரத்தில் எரிபொருளை தரையிறக்கும் செலவு, வரி, தயார்ப்படுத்தும் செலவு, நிர்வாக செலவு, இலாபம், விலை நிலைப்படுத்தல் நிதியத்திற்கான பங்களிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடங்குவதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

அதன்படி, இலாபம் மற்றும் விலை நிலைப்படுத்தல் நிதியத்திற்கான பங்களிப்பு ஆகிய இரண்டு விடயங்களையும் புறக்கணித்துவிட்டு, செலவுகளை மாத்திரம் ஈடுசெய்யும் வகையில் விலைத்திருத்தத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தரையிறக்கும் போது ஏற்படும் செலவு மற்றும் ஏனைய செலவுகளையும் சேர்த்து விநியோகிக்கும் போது இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மக்களுக்கு நட்டத்திலேயே எரிபொருளை வழங்கி வந்தது.

அதன்படி, ஒரு லிட்டர் ஒக்டேன் 92 பெட்ரோலை தரையிறக்கும் போது 339.54 சதம் செலவாகின்ற போதிலும் கடன் கடித கட்டணம், கட்டணப் பட்டியலை ஏற்றுக்கொள்ளும் செலவு, துறைமுக செலவு, விநியோகத்தர்களுக்கு வழங்கும் ஆவியாதல் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், விற்பனை விநியோகக் கட்டணம், செயன்முறை செலவுகள், நிதிச் செலவுகள் மற்றும் வரியினை சேர்க்கும் போது 421 ரூபா 71 சதம் செலவாகின்றது.

எனினும், 338 ரூபாவிற்கு ஒரு லிட்டர் பெட்ரோலை விற்பனை செய்யும்போது 83 ரூபா 71 சதம் நட்டத்தை எதிர்கொள்வதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அனைத்து செலவுகளையும் சேர்க்கும்போது, டீசலுக்கு 400 ரூபா 60 சதம் செலவாகின்ற போதும், தற்போது லிட்டருக்கு 60 சதம் நட்டம் அடையும் வகையிலேயே விலைத் திருத்தத்தை மேற்கொண்டுள்ளதாக கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

சுப்பர் டீசலுக்கு 444 ரூபா 95 சதம் செலவாகின்ற நிலையில், அதன் விலை 116 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், மண்ணெண்ணெய் தொடர்ந்தும் 87 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுகின்றது. மண்ணெண்ணெய்க்கு 362 ரூபா 26 சதம் செலவாகின்ற நிலையில், 275 ரூபா 26 சதம் நட்டத்தை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுள்ளதாக கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டினார்.

விலை அதிகரிப்பையடுத்து, எரிபொருள் விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, மோட்டார் சைக்கிளுக்கு ஆகக் கூடுதலாக 2500 ரூபாவிற்கும் முச்சக்கர வண்டிகளுக்கு 3000 ரூபாவிற்கும் ஏனைய வாகனங்களுக்கு ஆகக் கூடுதலாக 10,000 ரூபாவிற்கும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றம் பல்வேறு துறைகளையும் பாதித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 19.5 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதற்கமைய ஆகக்குறைந்த கட்டணம் 32 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இதுவரை அரசாங்கத்தினால் ஆலோசனை வழங்கப்படவில்லையென ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

எனினும், டீசல் விலை அதிகரிப்பிற்கு அமைய, வருடாந்தம் 15 பில்லியன் மேலதிக செலவை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியது.

ரயில்வே திணைக்களத்தின் வருடாந்த வருமானம் 6 பில்லியனாக அமைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் 10 பில்லியன் நட்டத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

இதனிடையே, முதலாவது கிலோமீட்டருக்காக 10 ரூபா விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு முச்சக்கர வண்டி சேவை சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாமும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக பாடசாலை வேன் சாரதிகள் சங்கம் தெரிவித்தது.

இதேவேளை, நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக டீசல் பயன்படுத்தப்படுவதுடன், எரிபொருள் விலையேற்றத்திற்கு எற்ப ஒரு மின் அலகிற்கான செலவும் அதிகரித்துள்ளது.

மின் உற்பத்திக்கு சுமார் 4500 மெட்ரிக் தொன் டீசல் தேவைப்படுவதுடன், நீர்மின் உற்பத்தி மற்றும் நுரைச்சோலை மின்பிறப்பாக்கி மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளமையினால், தற்போது அதன் தேவை 2000 மெட்ரிக் தொன்னாக குறைவடைந்துள்ளது.

ஒரு அலகு மின் உற்பத்திக்கு இலங்கை மின்சார சபை 44 ரூபாவை செலவு செய்கிறது. எனினும், தற்போது அது 17 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு அலகிற்கு 27 ரூபா நட்டத்தை மின்சார சபை எதிர்நோக்குகிறது. எனவே, மின் கட்டணம் 125 வீதத்தால் அதிகரிக்கப்பட்டால், 1000 ரூபா கட்டணம் செலுத்தும் ஒருவர் 2500 ரூபாவை செலுத்த வேண்டி ஏற்படும் என இலங்கை மின்சார சேவை சங்கம் குறிப்பிட்டது.

இதேவேளை, எரிபொருள் கொன்வனவிற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் டொலர் குறுகிய கால கடனைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் கடைசி பாடல் யூ டியூப்பிலிருந்து நீக்கம்

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார்...

அ.தி.மு.க. தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் | ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

ரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரால் கடந்த 50 ஆண்டுகளாக மனிதநேயமிக்க இயக்கமாக அ.தி.மு.க. விளங்கி வருகிறது.கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை யாரால், எப்படி ஏற்பட்டுள்ளது? யாரால் இந்த சதிவலை...

ரஞ்சிக் கோப்பை – மும்பையை வீழ்த்தி முதல் முறையாக கோப்பை வென்றது மத்திய பிரதேசம்

மத்திய பிரதேச அணியில் 3 வீரர்கள் சதம் அடித்து முத்திரை பதித்தனர்.4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி மத்திய பிரதேசம் முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றது.

தென் ஆப்பிரிக்கா – இரவு விடுதியில் 20 பேர் மர்ம மரணம்

தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் நைட் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நிறைய பேர் நேற்று கூடியிருந்தனர். இந்நிலையில், இரவு...

அ.தி.மு.க.வை ஒரு தலைமையின்கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் | சசிகலா

சென்னையில் இருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா திருவள்ளூர் மாவட்டத்துக்குச் சென்றார்.அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க. ஏழை எளியோருக்கான கட்சி என்றார்.

ரயில் கட்டணங்களை 50 சதவீதமாக அதிகரிக்குமாறு கோரிக்கை

ரயில் கட்டணங்களை சுமார் 50 சதவீதமாக அதிகரிக்குமாறு அமைச்சரவையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு ரயிலொன்று...

தொடர்புச் செய்திகள்

விரிவுபடுத்தலுக்கு உட்படும் எரிபொருள் விநியோகம்

புகையிரதங்கள் ஊடான எரிபொருள் விநியோகத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், நாளாந்தம் 05 மில்லியன் லீட்டர் எரிபொருளை விநியோகிக்கப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக...

நாட்டின் சில பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு

 எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் சில பகுதிகளில் இன்று (20) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். பருத்தித்துறை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள்...

எரிபொருள் கப்பலுக்கு கொடுப்பனவை செலுத்துவதில் தாமதம்

நாட்டை அண்மித்துள்ள எரிபொருள் கப்பலுக்கு கொடுப்பனவை செலுத்துவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. எரிபொருளுக்கான 42 மில்லியன் டொலர் பணம் இதுவரை திரட்டப்படவில்லை எனவும் நாளைய தினம்(18)...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

எரிவாயு சிலிண்டர்கள் ஜூலை 06 வரை இல்லை

சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

பெட்ரோல் ஏற்றிய கப்பல் தாமதமடையும் | எரிசக்தி அமைச்சர்

இன்று (24) நாட்டை வந்தடையவிருந்த பெட்ரோல் ஏற்றிய கப்பல் மேலும் தாமதமடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இது தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும்...

மே 9 வன்முறையில் கைதான நால்வருக்கு பிணை

கடந்த மே மாதம் 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 04 பேருக்கு...

மேலும் பதிவுகள்

அரசாங்க ஊழியர்கள் வௌிநாடு சென்று வர சம்பளம் இல்லாத விடுமுறை

சிரேஷ்டத்துவத்திற்கும் பதவி ஓய்விற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், 5 வருட காலத்திற்கு அரசாங்க ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வௌிநாடு சென்று வர சம்பளம் இல்லாத விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா

பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று...

உழவு இயந்திரக்கோளாறு காரணமாக இருவர் பலி

மட்டக்களப்பு – கரடியனாறு, மாவடியோடை குறுக்கு வீதியின் ஈரளக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். உழவு இயந்திரமொன்று இயந்திரக்கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி,...

இரட்டைக் கொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது

மன்னார் – உயிலங்குளம் இரட்டைக் கொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்படவுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் A.S.ஹிபதுல்லா முன்னிலையில் சம்பவம்...

கவிதையை வாழ்த்தாக்கிய கீர்த்தி சுரேஷ்

விஜய், கீர்த்தி சுரேஷ், vijay, keerthy sureshநடிகர் விஜய்யின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த போது பட நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறி அதிக செலவு...

பிந்திய செய்திகள்

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் கடைசி பாடல் யூ டியூப்பிலிருந்து நீக்கம்

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார்...

அ.தி.மு.க. தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் | ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

ரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரால் கடந்த 50 ஆண்டுகளாக மனிதநேயமிக்க இயக்கமாக அ.தி.மு.க. விளங்கி வருகிறது.கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை யாரால், எப்படி ஏற்பட்டுள்ளது? யாரால் இந்த சதிவலை...

ரஞ்சிக் கோப்பை – மும்பையை வீழ்த்தி முதல் முறையாக கோப்பை வென்றது மத்திய பிரதேசம்

மத்திய பிரதேச அணியில் 3 வீரர்கள் சதம் அடித்து முத்திரை பதித்தனர்.4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி மத்திய பிரதேசம் முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றது.

தென் ஆப்பிரிக்கா – இரவு விடுதியில் 20 பேர் மர்ம மரணம்

தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் நைட் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நிறைய பேர் நேற்று கூடியிருந்தனர். இந்நிலையில், இரவு...

அ.தி.மு.க.வை ஒரு தலைமையின்கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் | சசிகலா

சென்னையில் இருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா திருவள்ளூர் மாவட்டத்துக்குச் சென்றார்.அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க. ஏழை எளியோருக்கான கட்சி என்றார்.

ரயில் கட்டணங்களை 50 சதவீதமாக அதிகரிக்குமாறு கோரிக்கை

ரயில் கட்டணங்களை சுமார் 50 சதவீதமாக அதிகரிக்குமாறு அமைச்சரவையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு ரயிலொன்று...

துயர் பகிர்வு