புதிய நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை, தேசிய கொள்கை அமைச்சரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க நாட்டின் வருமானம் போதுமானதாக இல்லாமையினால், மேலும் ஒரு ட்ரில்லியன் ரூபாவை அச்சிட வேண்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் Reuters செய்தி சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை, தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்னிலையில் இன்று (25) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
6 தடவைகள் பிரதமராக செயற்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சராக பதவியேற்றுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதனிடையே, இரண்டு ஆண்டு வருட நிவாரணத் திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காக உட்கட்டமைப்புத் திட்டங்களை குறைக்கவுள்ளதாகவும் பிரதமர் Reuters செய்தி சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.