செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை குழந்தையுடன் சென்ற பெண் கொலை செய்யப்பட்டார்

குழந்தையுடன் சென்ற பெண் கொலை செய்யப்பட்டார்

0 minutes read

ஆயுதத்தால் தாக்கப்பட்டு குழந்தையுடன் வீதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பொல்பிதிகம கொலம்பஎல பிரதேசத்தில் (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், குறித்த பெண் வைத்தியசாலை ஒன்றுக்குச் சென்று விட்டு தனது சிறிய வயது குழந்தையுடன் வீடு திரும்பும் அவர் கூரிய ஆயுத்ததால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

சம்பவத்தில் 35வயதான பெண்ணே உயிரிழந்தவராவார். குறித்த பெண் கொலை செய்யப்பட்டுக் கீழே கிடந்த நிலையில் அவரது குழந்தை அருகில் காணப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார், குழந்தைக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் பொல்பித்திகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையை செய்தார் எனக் கூறப்படும் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்ய பொல்பித்திகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.