செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கார் புகையிரதத்துடன் மோதி விபத்து

கார் புகையிரதத்துடன் மோதி விபத்து

1 minutes read

கார் ஒன்று புகையிரத கடவையில் புகையிததத்துடன் மோதியதில், அதில் பயணித்த கர்ப்பிணி பெண் மற்றும் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளனர்.

இன்று முற்பகல் 10.30 மணியளவில் காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கங்காராம புகையித குறுக்கு பாதையின் ஊடாக சமிக்ஞை விளக்கு ஒளிந்து கொண்டிருந்த வேளையில் மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த கார் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விபத்தில் காரில் பயணித்த சாரதி உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்து, காலி, கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த காரில் பயணித்த கர்ப்பிணி பெண் ஒருவர் மற்றும் பெண் குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த புகையிரத கடவைக்கு கதவு இல்லை என்பதோடு, அக்கடவையானது சமிக்ஞை விளக்கின் மூலம் மாத்திரமே இயங்கி வருகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மரணமடைந்தவர்களின் சடலங்கள் கராப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, காலி துறைமுக பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வாகனங்களை புகையிரது கடவை ஊடாக செலுத்தும் அனைத்து சந்தர்ப்பங்களிலும், புகையிரத சமிச்சை விளக்குகள் தொடர்பில் உரிய அவதானம் செலுத்தி, உரிய வீதி சட்ட திட்டங்களை பின்பற்றுவதன் மூலம் இவ்வாறான துர்பாக்கியமான விபத்துகளில் இருந்து விபத்துகளை தடுக்க முடியும் என அனைத்து சாதிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.