சீரற்ற வானிலையினால் போக்குவரத்து தடை நிலவும் மலையகம்

மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து, தியகல நோட்டன் வீதியில் பல்வேறு இடங்களில்தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.

தற்போது வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ள மண் மேட்டினை அகற்றும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் முன்னெடுத்த போதிலும் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை அதற்கு இடையூறாக காணப்படுகின்றது.

மலையகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்