March 26, 2023 9:57 pm

வடக்கில் மோப்ப நாயின் துணையுடன் களமிறங்கிய பொலிஸ்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம் என்பவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கும் வவுனியா, நெளுக்குளம் பொலிஸார் மோப்ப நாயின் துணையுடன் விசேட சோதனை நடவடிக்கையை இன்று முன்னெடுத்தனர்.

வவுனியா, நெளுக்குளம் சந்திப் பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அண்மைக்காலமாக வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும் பரிமாற்றம் என்பன அதிகரித்துள்ளதுடன், வவுனியாவிலும் போதைப்பாவனை அதிகரித்துள்ளது.

இதையடுத்துப் போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை என்பவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நெளுக்குளம் பொலிஸார் மோப்ப நாயின் துணையுடன் வீதியால் சென்ற பஸ்கள், சொகுசு வாகனங்கள் என்பவற்றை மறித்துச் சோதனையிட்டதுடன், சந்தேகத்துக்கிடமான இடங்கள் மற்றும் நபர்களையும் சோதனைக்கு உட்படுத்தினர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்