செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முரண்பாடுகள் வேண்டாம்! – தமிழ் அரசியல்வாதிகளுக்கு அரசு அறிவுரை

முரண்பாடுகள் வேண்டாம்! – தமிழ் அரசியல்வாதிகளுக்கு அரசு அறிவுரை

0 minutes read

“தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் களைந்துவிட்டு தமிழ் மக்களின் எதிர்கால நலனில் அக்கறை செலுத்த வேண்டும். அரசியல் தீர்வைக் காண்பதற்கான பயணத்தில் ஜனாதிபதியுடன் அவர்கள் கைகோர்க்க வேண்டும்.”

– இவ்வாறு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ச வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவசரப்பட்டு அரசியல் தீர்வைக் கொண்டுவர முயலவில்லை. தேசிய இனப்பிரச்சினையால் தமிழர்கள் தொடர்ந்து பாதிக்கப்படக்கூடாது என்பதைக் கருத்திற்கொண்டே அரசியல் தீர்வைக் காண்பதற்கான பயணத்தில் அவர் இறங்கியுள்ளார். தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் களைந்துவிட்டு தமிழ் மக்களின் எதிர்கால நலனில் அக்கறை செலுத்த வேண்டும். அரசியல் தீர்வைக் காண்பதற்கான பயணத்தில் ஜனாதிபதியுடன் அவர்கள் கைகோர்க்க வேண்டும்.

நல்லிணக்கம் தொடர்பான பல நிறுவனங்கள் எனது அமைச்சின் கீழ் உள்ளன. அந்த நிறுவனங்கள் தங்கள் பணிகளைத் துரிதமாக முன்னெடுக்கின்றன” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.