செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடமராட்சி விபத்தில் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

வடமராட்சி விபத்தில் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

0 minutes read

யாழ்., வடமராட்சியில் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையிலிருந்து பயணித்தவர், தவறி வீழ்ந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

புலோலி தெற்கைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ராசு புவனேஸ்வரன் (வயது – 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டிலிருந்து வேலைக்கு மோட்டார் சைக்கிளில் இன்னொருவருடன் பயணித்துள்ளார். இவர் தலைக்கவசம் அணியாது பின்னால் இருந்துள்ளார். மந்திகைச் சந்தியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்தபோது இவர் தவறி வீழ்ந்துள்ளார்.

இவர் படுகாயங்களுடன் மந்திகை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார். இந்தநிலையில், நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.