March 31, 2023 6:35 am

சுற்றுலாப் பயணிகளிடம் பணம் பறிக்கும் கும்பல் சிக்கியது!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பலவந்தமாக வாகனங்களில் ஏற்றி பணம் சம்பாதிக்கும் 6 பேர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தரகுப் பணம் வாங்கும் இந்தத் தரகர்கள், விமான நிலையத்தின் ஆரம்ப முனையத்தின் முன்பு காத்திருந்து, முகவர்கள் இல்லாமல் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வாகனங்களில் ஏறும்படி வற்புறுத்தியதை அவதானிக்க முடிந்தது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இலங்கைக்கு வரும் நபர்களின் பயணப்பொதிகளை வலுக்கட்டாயமாக ஏற்றி அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதுடன், அவர்களுக்கும் பெரும் தொல்லை கொடுக்கும் வகையில் செயற்பட்டனர் என்று கூறப்படுகின்றது.

இவ்வாறு செயற்படும் ஏனைய நபர்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என குறித்த விசாரணையுடன் தொடர்புடைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்