செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தாழமுக்கம்  தற்போது சூறாவளியாக மாறியது | வளிமண்டலவியல் திணைக்களம்

தாழமுக்கம்  தற்போது சூறாவளியாக மாறியது | வளிமண்டலவியல் திணைக்களம்

1 minutes read

வங்க கடலில்  ஏற்பட்டுள்ள தாழமுக்கம்  தற்போது  ‘மோக்கா’ சூறாவளியாக உரு பெற்று உள்ளது.

இதனால் மறு அறிவித்தல் இல்லாமல்  கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்த படுகின்றனர்.  மேல், சபரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் இன்று(11.05.2023) 75 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வட மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யும் அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

அத்துடன் மேல், தென் கரையோர பகுதிகள் மற்றும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், இடி மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.