செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யானை தாக்கி இன்றும் இருவர் மரணம்!

யானை தாக்கி இன்றும் இருவர் மரணம்!

1 minutes read

வெவ்வேறு இரு இடங்களில் இன்று காட்டு யானை தாக்கி இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

பொலனறுவை மாவட்டம், வெலிக்கந்தையில் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கி ஒருவர் சாவடைந்துள்ளார்.

வெலிக்கந்தையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் வயல் காணியில் காவலுக்கு நின்ற வேளை யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் இன்று பகல் வெலிக்கந்தைப் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் இன்று மாலை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்தச் சம்பவத்தில் சாவடைந்துள்ளார்.

குறித்த நபர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை வீதியைக் குறுக்காகக் கடந்து சென்ற காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்த படல்கும்புரை பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.