செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் பலி!

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் பலி!

0 minutes read

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் யானை தாக்கிக் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விவேகானந்தபுரம் – ஆயிரம்கால் மண்டபம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தும்பங்கேனி – சுரவனையடி ஊற்று கிராமத்தை சேர்ந்த 59 வயதுடையை நாகமணி நாராயனபிள்ளை என்ற 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார் என்று வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விவேகானந்தபுரம் – ஆயிரம்கால் மண்டபத்தில் உள்ள வைரவர் ஆலயத்துக்கு நேற்று (07) மாலை ஆலய வழிபாட்டுக்குச் சென்றவரே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

இன்று (08) காலை அந்தப் பகுதிக்குச் சென்றவர்கள் குறித்த பகுதியில் சைக்கிள் மற்றும் சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்குச் சென்ற வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் மக்கள் காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கின்றனர் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.