புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். இளைஞர் கந்தக்காட்டில் புனர்வாழ்வுக்கு!

யாழ். இளைஞர் கந்தக்காட்டில் புனர்வாழ்வுக்கு!

0 minutes read

உயிர்கொல்லி ஹெரோய்னை ஊசி மூலம் பயன்படுத்திய 21 வயதான இளைஞர் ஒருவர் நீதிமன்றப் பணிப்புக்கு அமைவாக கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிர்கொல்லி போதைப்பாவனைக்கு இளைஞர் அடிமையானதையடுத்து வீட்டார் பொலிஸாருக்கு முறையிட்டுள்ளனர். பொலிஸார் இளைஞனை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது உயிர்கொல்லி போதைப்பாவனைக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் ஊடாக அவரைக் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.