December 2, 2023 4:18 pm

இன்று அதிகாலை கோரவிபத்து

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இன்றுஅதிகாலை தம்புத்தேகம ஹிரியகம பகுதியில்  கோரவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது .  இந்த வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வேன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது லொறியின் பின்பகுதியில் போதியதால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குருநாகலிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியோரத்தில் நிறுத்த முற்பட்ட போது, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதே திசையில் பயணித்த வேன் லொறியின் பின்பகுதியில் மோதியுள்ளது.

விபத்தின் போது வேனில் பயணித்த 8 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்