செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இம்ரான் கானுக்காகக் குரல் எழுப்பும் மனோ!

இம்ரான் கானுக்காகக் குரல் எழுப்பும் மனோ!

0 minutes read

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விவகாரம் தொர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இம்ரான் கானுக்கு மூன்றாண்டு சிறை. ஐந்தாண்டு அரசியல் இல்லை,

ஆரம்பத்திலிருந்தே அவரை அரசியலிலிருந்து அகற்ற அவசரம் காட்டினார்கள்.

இந்த நாடு உருப்படவே படாது போல…! வளராது தேய்ந்தே போயிடும் போல…!!

நல்லவேளை வங்களாதேசம் பிரிந்து, இன்று வளருகின்றது. இல்லாவிட்டால் வங்காளதேசிகளும் தேய்பிறையாக தேய்ந்து போயிருப்பர்” – என்றுள்ளது.

தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 ஆண்டுகள் தகுதி நீக்கம் மற்றும் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்தும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.