செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோர விபத்தில் மூவர் பரிதாபச் சாவு! – இருவர் படுகாயம்

கோர விபத்தில் மூவர் பரிதாபச் சாவு! – இருவர் படுகாயம்

0 minutes read

கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் ரம்பேவ – அநுராதபுரம் ஏ – 20 பிரதான வீதியின் 13ஆம் மற்றும் 14ஆம் மைல் கற்களுக்கு இடையே இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்வையிடச் சென்றவர்கள் மீது கப் ரக வாகனமொன்று மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதனையடுத்து குறித்த கப் ரக வாகனத்துடன் அதன் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்தநிலையில், அந்தக் கப் ரக வாகனத்துடன் அதில் பயணித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனத்தை 18 வயதுடைய நபரே செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

விபத்தில் 15, 19 மற்றும் 21 வயதுடைய மூவர் பலியாகியுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.