செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாமல் களமிறங்கினால் ஆதரவு – மொட்டு எம்.பி. கூறுகின்றார்

நாமல் களமிறங்கினால் ஆதரவு – மொட்டு எம்.பி. கூறுகின்றார்

0 minutes read
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவைக் களமிறக்குவதற்குக் கட்சி தீர்மானித்தால் அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ. டி. வீரசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“நபர்கள் முக்கியம் அல்ல, கட்சி எடுக்கும் முடிவே எமக்கு முக்கியம். எனக்குத் தனிப்பட்ட நிலைப்பாடு இருந்தாலும் கட்சியின் முடிவுக்கே கட்டுப்படுவேன்.

நாமல் ராஜபக்ஷ சிறந்த இளம் தலைவர். தூர நோக்கு சிந்தனை உள்ளது. சர்வதேசத்துடன் சிறந்த தொடர்பைப் பேணி வருகின்றார். எனவே, இளைஞர் ஒருவருக்கும் வாய்ப்பளிப்பது நல்லது.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.