செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேரரின் தாக்குதலுக்கு இலக்காகி முதியவர் உயிரிழப்பு

தேரரின் தாக்குதலுக்கு இலக்காகி முதியவர் உயிரிழப்பு

1 minutes read

கிரிஉல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாரவிட பிரதேசத்தில் தேரர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிஉல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (7) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கிரிஉல்ல , மாரவிட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் காயமடைந்த நிலையில் முதியவரொருவர் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, காயமடைந்த முதியவர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கொடேவத்த, மாரவிட பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவரொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முதியவரின் உறவினரான தேரரொருவரினால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான தேரர் விகாரையொன்றில் பணிபுரியாமல் தனது தாயின் வீட்டில் வசித்து வருவதாகவும் சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிஉல்ல பொலிஸார் மேற்கொண்டு“டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.