நீண்ட பரிசீலனைக்குப் பின்னர் கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், பெலியத்த பகுதியில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை மேலதிக நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகள் இன்று யோஷித ராஜபக்ஷவை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
அதற்கமைய, அவரை 50 மில்லியன் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்குக் கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டார்.
சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு நீதிவான் தடை விதித்ததுடன், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு இது குறித்து அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.
இதன்படி, சந்தேகநபரை ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறும், சாட்சியாளர்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதற்குப் போதுமான மற்றும் திருப்திகரமான ஆதாரங்களை மனுதாரர் தரப்பு சமர்ப்பிக்கத் தவறியதால், பிணைச் சட்டத்தின் விதிகளின்படி பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க அனுமதியளித்தார்.