செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தென்னிலங்கையில் ஒருவர் சுட்டுப் படுகொலை!

தென்னிலங்கையில் ஒருவர் சுட்டுப் படுகொலை!

0 minutes read

தென்னிலங்கையில் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காலி, மீட்டியாகொட, தம்பஹிட்டியவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த 47 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் மற்றைய நபருடன் விடுதியொன்றில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் 46 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன் 52 வயதுடைய நபர் காயமடைந்த நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இருவரால் ரி – 56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மீட்டியாகொட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.