செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 78 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வேன் திருட்டு | சந்தேக நபர் கைது

78 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வேன் திருட்டு | சந்தேக நபர் கைது

0 minutes read

கேகாலையில் தெரணியகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வேன் ஒன்றை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேக நபர் ஒருவர் தெரணியகல பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (03) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெரணியகல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் தெரணியகல – அங்ஹெட்டிகம பகுதியில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் அங்ஹெட்டிகம பகுதியில் வசிக்கும் 36 வயதுடையவர் ஆவார்.  திருடப்பட்ட வேனும் சந்தேக நபரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  இது தொடர்பில் தெரணியகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.