சுற்றுப்புறச்சூழல் தினம் 2025ஐ முன்னிட்டு நேற்றைய தினம், Greenlayer அமைப்பினால் மிகச்சிறப்பாக மரநடுகை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் ( sen.patrick’s college) சென் பற்றிக்ஸ் கல்லூரியில் உலகசுற்றுச் சூழல் தினம் தொடர்பாக மாணவர்களுக்கு ஒரு விளக்கவுரை நிகழ்த்த பாடசாலை சமூகத்தின் அழைப்பினை ஏற்று நிகழ்த்தியவேளை மாணவர்கள் மரநடுகை தொடர்பான அனுபவ பகிர்வுகளை ஆர்வமாக செவிமடுத்திருந்தனர். அத்துடன் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.
இதேவேளைஈ யாழ்ப்பாணம் பழைய பூங்கா (old park) இல் யாழ் மாவட்ட அரசஅதிபரினால் ஏற்பாடு செய்யப்பட்ட Greenlayer இன் 450 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நேற்றுக் காலை 9.00 மணியளவில் ஆரம்பமானது. அதில் யாழ்ப்பாணம் கச்சேரியில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் ஒவ்வொரு மரக்கன்றுகள் விகிதம் நாட்டியிருந்தனர்.
அத்துடன் வலி கிழக்கு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை நிகழ்வு அச்சுவேலி -வல்லை பிரதான வீதியில் பரல்களிலான பெரிய மரக்கன்றுகள் 15 நடப்பட்டது.