அரகலய காலத்தில் இடம்பெற்ற வன்முறைகளிற்காக பெற்றுக்கொண்ட சாச்சைக்குரிய நஷ்டஈடு தொடர்பில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச கைதுசெய்யப்படலாம் என சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது.
அரகலயவன்முறையின்போது வீடொன்று சேதமாக்கப்பட்டதாக தெரிவித்து அதற்கு நஷ்ட ஈடு பெற்றுக்கொண்டமை தொடர்பிலேயே சமல் ராஜபக்ச கைதுசெய்யப்படவுள்ளார்.
திஸ்ஸமகராம மாகமவில் உள்ள தனது வீடு சொத்துக்களிற்கு சேதமேற்படுத்தப்பட்டதாக தெரிpவித்து சமல்ராஜபக்ச 15.2 மில்லியன் இழப்பீட்டினை பெற்றுக்கொண்டுள்ளார்.எனினும் குறிப்பிட்ட சொத்து அவருடையது இல்லை,அங்கு கட்டுமானங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றின் தீர்ப்பு மிக மிக முக்கியமானது. நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய,முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச ,முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் திறைசேரியின் செயலாளராகவிருந்த பி.பி.ஜெயசுந்தர உள்ளிட்ட ஏழு நபர்களே பொறுப்பு என தீர்ப்பொன்றை உயர் நீதிமன்றம் அளித்திருந்தது. இப்போது அப்பட்டியலில் ராஜபக்ச குடும்பத்தின் மூத்த சகோதரரும் இணையப்போகின்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.