செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொவிட் பரவல் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சுவாச நோய்கள் அதிகரிப்பு

கொவிட் பரவல் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சுவாச நோய்கள் அதிகரிப்பு

1 minutes read

நாட்டில் கடந்த சில வாரங்களில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச நோய்கள் அதிகரித்து வந்தாலும், கொவிட்-19 நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இது தொடர்பாக தொற்றுநோயியலின் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அதுல லியனபத்திரண கருத்து தெரிவிக்கையில்,

“கொவிட்-19 இப்போது பல்வேறு சுவாச நோய்களில் ஒன்றாகவே கண்காணிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரத்தின்படி, கொவிட் நோயாளிகள் தொடர்பான தனித் தரவுகள் சேகரிக்கப்படுவதில்லை. எனினும், நிலைமையின் மீது எங்களது தீவிர கண்காணிப்பு தொடர்ந்தும் காணப்படுகிறது” என்றார்.

மேலும், இந்நேரத்தில் இன்புளுவென்சா மற்றும் பிற சுவாச நோய்களின் பரவல் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சுவாச நோய்கள் தொடர்பான கண்காணிப்பு மற்றும் மீள்பார்வை நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய சுவாச நோய்கள் அதிகரித்திருக்கும் சூழ்நிலையில், மக்கள் சுவாச நிலையை சீராக வைத்திருக்க ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதாவது, இருமல், தும்மலின்போது தொற்றுக்களைத் தடுக்கும் முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.

காய்ச்சல், இருமல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றும் தருணங்களில், உடனடியாக மருத்துவ உதவியை பெற வேண்டும்.

இந்த நோய்கள் அதிகமாக பாதிக்கக்கூடியவர்களான வயதானோர், குழந்தைகள் மற்றும் நீண்டநாள் நோயாளிகள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

அத்துடன், மருத்துவ ஆலோசனையை தவிர்க்காமல் பெறுவது, நோய் பரவலையும் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் தடுக்கும் முக்கியமான வழி என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.