செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது | அரசாங்கம்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது | அரசாங்கம்

1 minutes read

ஈரான் – இஸ்ரேல் மோதலால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை. எதிர்வரும் இரண்டரை மாதங்களுக்கு தேவையான எரிபொருட்கள் நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு மேலதிகமாக மேலும் 4 எரிபொருள் கப்பல்கள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அராசங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (17)  இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஈரான் – இஸ்ரேல் மோதலால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை. எதிர்வரும் இரண்டரை மாதங்களுக்கு தேவையான எரிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய 160 000 மெட்ரின் தொன் மசகு எண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் மேலும் 90 000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் நாட்டை வந்தடையவுள்ளது.

நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேலும் 4 மசகு எண்ணெய் கப்பல்கள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு 246 200 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 ரக பெற்றோல் , 5000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 ரக பெற்றோல் , 193 250 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல், 10 500 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் என்பனவும் ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டு, அவை பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

தற்போது நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் எதிர்வரும் இரண்டரை மாதங்களுக்கு போதுமானது என்பதோடு, இந்த முற்பதிவுகளும் இனிவரும் நாட்களில் கிடைக்கப் பெறவுள்ளன. எனவே மக்கள் வீண் அச்சம் கொண்டு, வரிசைகளில் நின்று எரிபொருளைப் பெற்று வீடுகளில் தேவைக்கதிகமாக களஞ்சியப்படுத்த வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More