மிக நீண்ட காலமாக அருகிப் போயிருந்த துவிச் சக்கர வண்டி ஓட்டப்போட்டி நிகழ்வுகள் கிளிநொச்சியில் கடந்த இரண்டு வருடங்களாக மீண்டும் களைகட்டத் தொடங்கியிருக்கிறது.
அமரர் அகஸ்ரின் அவர்களின் ஞாபகார்த்தமாக கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு பிரிவின் ஒத்துழைப்புடன் இடம்பெறும் மாபெரும் துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி நிகழ்வு இவ்வாண்டும்
19/07/2025 அன்று கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெறுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது .
இவ் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட மட்டத்தில் பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் பங்குபற்றும் பாடசாலைகளுக்கிடையிலான துவிச்சக்கர வண்டி ஓட்ட நிகழ்வு முதல்முறையாக நடைபெறவுள்ளது.
திறந்த போட்டியானது மாகாண மட்டத்தில் ஆண், பெண் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டிகளாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெறும் வீர, வீராங்கனைகளுக்கு பெறுமதியான பரிசில்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பரிசில் வழங்கி மதிப்பளிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ.ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் / வடக்கு மாகாணம் அவர்களும்
சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட செயலர் (பதில்) திரு.சுப்பிரமணியம் முரளீதரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர்.
இந் நிகழ்வுகளை அமரர் அகஸ்ரின் குடும்பத்தின் சார்பாக திரு.அகஸ்ரின் கிறிஸ்ரிரூபன் நெறிப்படுத்தி தலைமை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னைய ஆண்டுகளில் நடந்த போட்டிகளின் பதிவுகள்