செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கெஹலியவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும் பிணையில் விடுதலை!

கெஹலியவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும் பிணையில் விடுதலை!

0 minutes read

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மற்றைய இரு மகள்களையும் மருமகனையும் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (19) உத்தரவிட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்லவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும் 50 ஆயிரம் ரூபா ரொக்க பிணை மற்றும் தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

134 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள சொத்து விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக  கெஹலிய ரம்புக்வெல்லவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும்  இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்  இன்று காலை முன்னிலையாகிய போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.