வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்த ஐ.நா. அதிகாரி
2025 ஜூன் 25 – முல்லைத்தீவு, ஈழம்
ஈழத்திலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்களை, இன்று முல்லைத்தீவில் நேரில் சந்தித்தார், சிறப்பு புலனாய்வு பணி பயணமாகக் கொண்டுவரப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர்.
முல்லைத்தீவு மாவட்ட சமூக மையத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், பல ஆண்டுகளாக தங்கள் பிள்ளைகள், கணவர்கள், உறவுகளைத் தேடி வரும் மாதர்கள், மனைவிகள், சிறார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது ஆழ்ந்த மனவலிகள், கண்ணீருடன் கூடிய எதிர்பார்ப்பு, நீதிக்கான கோரிக்கைகளைத் தூக்கி உரைத்தனர். சிலர் தங்கள் காணாமல் போனோரின் புகைப்படங்களையும் கடைசி தடவையாகக் காணப்பட்ட தகவல்களையும் அதிகாரிக்கு வழங்கினர்.
“எங்களால் நிறையக் காத்திருக்க முடியாது. எங்களது கண்ணீரையும் பிளப்பையும் உலகம் கேட்க வேண்டும். எங்களது குழந்தைகள் எங்கே? ஏன் அவர்கள் திரும்பவில்லை?” எனக் கேட்டார் ஒரு தாய்.
சந்திப்பின் போது, அதிகாரி கவனமாகக் கேட்டுப் பதிவு செய்தார். “உங்கள் குரலும் உணர்வுகளும் விரைவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவைக்குத் தாக்கல் செய்யப்படும் அறிக்கையில் இடம்பெறும்” என உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து, அவர் சமீபத்திய காலங்களில் எலும்புக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மக்கள் புதைகுழி பகுதிக்கு விஜயம் செய்தார். இவை மறைக்கப்பட்ட போர் குற்றச்செயல்கள் தொடர்பான சந்தேகங்களை அதிகரிக்கின்றன.
தமிழ் சிவில் சமூகக் குழுக்களும் இந்தச் சந்திப்பை வரவேற்றாலும், கடந்த ஆண்டுகளில் ஐ.நா. மேற்கொண்ட விசாரணைகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை என்பதற்காக கடும் ஏமாற்றம் தெரிவித்தனர். போர் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது சர்வதேச தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றனர்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் திருகோணமலையில் – ச.சிவயோகநாதன் அவர்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தினார்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இன்று திருகோணமலையில் உள்ள யுப்லி மண்டபத்திற்கு வருகை தந்தார். இந்நிகழ்வின் போது, மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் திரு ச.சிவயோகநாதன் அவர்கள் ஆணையாளரை நேரில் சந்தித்து, முக்கியமான விடயங்களை எடுத்துரைத்தார்.
திரு சிவயோகநாதன் அவர்கள் ஆணையாளர் முன் வலியுறுத்திய முக்கியமான விடயங்கள் பின்வருமாறு:
வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் நில அபகரிப்பு சம்பவங்கள்
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது அரசியல் அடக்குமுறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள்
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச விசாரணையின் அவசியம்
திட்டமிட்ட இன மாற்றமும், பாரம்பரியத்தை அழிக்கும் நடவடிக்கைகள்
பௌத்த விகாரைகளின் ஆக்கிருமிப்பு மற்றும் அவர்களால் மேற்கொள்ளப்படும் அதிகார மீறல்கள்
மேலும், மேற்கண்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வடகிழக்கில் நடைபெற்று வரும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்தும், ஒரு தரமான கோரிக்கை மணு ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இக் காணொளிக் கூட்டம் மற்றும் ஆவண கையளிப்பு நிகழ்வு, நீண்ட காலமாக தொடரும் தமிழ் மக்கள் மீதான structural injustice-ஐ சர்வதேசம் முன் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தும் முக்கியமான கட்டமாகும்.
ஈழத்து நிலவன்
25/06/2025