செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை செம்மணியில் ஏற்றப்பட்ட அணையா தீபம் தொண்டமனாற்று கடலில்

செம்மணியில் ஏற்றப்பட்ட அணையா தீபம் தொண்டமனாற்று கடலில்

0 minutes read

செம்மணியில் கடந்த மூன்று நாட்களாக அணையா தீபமாக எரிந்து கொண்டிருந்த தீபம் நேற்றைய தினம் புதன்கிழமை (26)  தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது.

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு , யாழ் , வளைவுக்கு அருகில் அணையா தீபம் ஏற்றப்பட்டு , தொடர்ச்சியாக மூன்று நாட்களாக தீபம் அணையாது போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மூன்றாம் நாளான நேற்றைய தினம் மாலையுடன் போராட்டம் நிறைவு பெற்றதனை அடுத்து , அணையா தீபம் தொண்டமனாற்று பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு ,கடல் நீரில் விடப்பட்டது.

மூன்றாம் நாள் போராட்டமான நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நேரில் வருகை தந்து , அணையா தீபம் முன் நின்று வணங்கி மலரஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.