செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை  புதிய கல்விச் சீர்திருத்தமானது எங்களது மாணவர்கள் மீது கரிசனை கொண்டது அல்ல | சபா குகதாஸ் 

 புதிய கல்விச் சீர்திருத்தமானது எங்களது மாணவர்கள் மீது கரிசனை கொண்டது அல்ல | சபா குகதாஸ் 

1 minutes read

ஜனாதிபதி அநுர குமார தலைமையிலான அரசாங்கம் நிகழ்ச்சி நிரலை ஆரம்பித்திருக்கிறது. புதிய கல்வி சீர்திருத்தமானது எங்களது மாணவர்கள் மீது கரிசனை கொண்டதல்ல. வரலாறு, மொழி, தேசியம் எல்லாவற்றையும் இளமைக் காலத்தில் அப்புறப்படுத்திவிட்டு வாழ்க்கை என்பது தொழில்தான் என்று தொழிற்கல்வி நோக்கிய ஒரு கல்விச் சீர்திருத்தத்தை கொண்டுவந்து, தேசியம், மொழி, வரலாறு என சிந்திக்கக் கூடாது என ஒரு நீண்டகால அடிப்படையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

சங்கானையில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற மாவை சேனாதிராஜாவின் நினைவு அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனுர குமார அரசாங்கத்துக்கு வெறுமனே தமிழ் மக்கள் மீதோ, முஸ்லிம் மக்கள் மீதோ, மலையக தமிழ் மக்கள் மீதோ எந்த கரிசனையும் கிடையாது. கரிசனை இருந்திருந்தால் அவர்கள் ஆட்சியைப் பொறுப்பேற்று பத்து மாதங்கள் கடந்துகொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் எஞ்சி இருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்திருக்கலாம்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி நல்லெண்ணத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அவர்களால் பிரிக்கப்பட்ட வடக்கு – கிழக்கை மீள இணைத்து நல்லெண்ண வெளிப்பாட்டை ஏற்படுத்தியிருக்கலாம். இவை ஒன்றுமே நடக்காது.

நாங்கள் மீள மீள ஏமாறப்போகிறோமா? அல்லது அவர்களைப் பார்த்து பரவசப்படப் போகின்றோமா என்பதுதான் எங்கள் முன்னால் உள்ள கேள்வி.

இந்த நாட்டுக்குள் நீதி இல்லை. இந்த நாட்டுக்குள் நீதிமன்றத்தின் ஊடாக நீதி கிடைத்திருந்தால் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணபவராஜா நாட்டை விட்டு ஓடியிருக்க வேண்டிய தேவை இல்லை. அதுவே எமக்கு ஒரு சிறந்த உதாரணம்.

செம்மலை நீராவியடியில் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக பௌத்த பேரினவாதம் செய்த அத்தனை அநியாயங்களையும் கண்டுதான் நீதிபதி சரவணபவராஜா தப்பி ஓடினார்.

உண்மையை கண்டறியுங்கள் என கடிதம் எழுதுவது முட்டாள்தனம். என்னைப் பொறுத்தவரையில் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையில்தான் எமக்கான நீதி கிடைக்கப்பெறும் என மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.