செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அநுராதபுரத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  ஊழியர்களை அச்சுறுத்திக் கொள்ளை

அநுராதபுரத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  ஊழியர்களை அச்சுறுத்திக் கொள்ளை

1 minutes read

அநுராதபுரத்திலுள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத மூன்று பேர் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்த பணத்தினை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் இன்று திங்கட்கிழமை (28) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அருகிலுள்ள தீப்தி எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் பண்டுளகம உபுள் எண்டபிறைஸஸ் நிரப்பு நிலையங்களிலேயே இந்த  கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர்  தெரிவித்தனர்.

இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத மூன்று பேர் தீப்தி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தையும் உபுள் எண்டபிறைஸஸ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் யார் என்பது அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.