செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு | மனித உரிமைகளுக்கான மையம் நேரில் ஆய்வு

சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு | மனித உரிமைகளுக்கான மையம் நேரில் ஆய்வு

1 minutes read

திருகோணமலை சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரப் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில், மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மையத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி இரட்ணவேல் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் வியாழக்கிழமை (31) நேரில் விஜயம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப் பகுதிகளைக் கண்டெடுத்தது.இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கடந்த ஜூலை 23ஆம் திகதி மூதூர் நீதிமன்ற நீதிபதி, அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்தனர்.

புதன்கிழமை (30)மூதூர் நீதிமன்ற நீதிபதி ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தார். அதன்படி, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்களத்திடம் இருந்து அப்பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான அறிக்கையைப் பெற்று, எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி குறித்த இடத்தில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பாக ஆராய்வதற்காக சட்ட மாநாடு ஒன்றை நடத்த அவர் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் (ஜூலை 31) சம்பூர் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட சட்டத்தரணிகள் குழுவினர், குறித்த பகுதியை நேரடியாகப் பார்வையிட்டதுடன், அப்பகுதி கிராம மக்களுடனும் விரிவாக உரையாடி தகவல்களைப் பெற்றுக்கொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.