செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் : நீர்ப்பாசனத் திணைக்களம்

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் : நீர்ப்பாசனத் திணைக்களம்

0 minutes read

தற்போது 36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார் 80 சதவீதம் தற்போது சேமிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மல்வத்து ஓயா பகுதியில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று பிற்பகல் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் பல முறை மழை பெய்யக்கூடும் என்று திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More