செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இயக்குநர் அபிஷேக் நாமாவின் ‘நாக பந்தம்’ பட அப்டேட்

இயக்குநர் அபிஷேக் நாமாவின் ‘நாக பந்தம்’ பட அப்டேட்

1 minutes read

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான விராட் கர்ணா கதையின் நாயகனாக நடித்து வரும் ‘நாக பந்தம்’ எனும் திரைப்படத்தில் பொலிவுட் நடிகர் ரிஷப் சாஹ்னி நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் தோற்றப் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில் தயாராகி வரும் ‘நாக பந்தம் ‘ எனும் திரைப்படத்தில் விராட் கர்ணா, நபா நடாஷ் ,ரிஷப் சாஹ்னி, ஐஸ்வர்யா மேனன், முரளி சர்மா, ஜெகபதி பாபு , பி. எஸ் .அவினாஷ் , ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அபே மற்றும் ஜுனைத் குமார் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள் பிரம்மாண்டமான பொருட்செலவில் புராண இதிகாச படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை அபிஷேக் பிக்சர்ஸ் மற்றும் நிக் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கிஷோர் மற்றும் நிஷிதா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

எதிர்கால கோடை விடுமுறையில் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் அப்தாலி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பொலிவுட் நடிகர் ரிஷப் சாஹ்னியின் கேரக்டர் லுக்கை போஸ்டராக வெளியிட்டுள்ளனர். இது நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் இடையேயான போர் என்பதும்… அதில் தீய சக்தியாக அப்தாலி இடம்பெறுகிறது என்பதும் தெரிய வருவதால் …ரசிகர்களிடத்தில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.