செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காதலர் தினம் ; நுவரெலியாவில் சிவப்பு ரோஜா ஒன்றின் விலை 750 ரூபாய்!

காதலர் தினம் ; நுவரெலியாவில் சிவப்பு ரோஜா ஒன்றின் விலை 750 ரூபாய்!

1 minutes read

காதலர் தினத்தை முன்னிட்டு பூ கடைகளில் கடந்த ஒரு வார காலமாகவே ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

காதலர் தினம் இன்று (14) (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது இதையொட்டி காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டைகள், சாக்லேட் உள்ளிட்ட வித விதமான பரிசு பொருட்களை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம்.

காதலுக்கும் ரோஜாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு மேலும் காதலின் அடையாளமாகவே ரோஜாப்பூ மாறிவிட்டதால் காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கடைகளில் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருக்கும் ஆனால் இம்முறை நுவரெலியாவில் வியாபாரம் சற்று மந்தமாக உள்ளதாக தெரிவிக்கின்றன.

இதில் சிகப்பு ரோஜா 750 ரூபாவிற்கும் மஞ்சள் ரோஜா 600 ரூபாவிற்கும்  வெள்ளை ரோஜா 400 ரூபாவிற்கும் விற்பனை செய்து வருகின்றனர் இதனால் பூக்களை வாங்குவதைத் தவிர்க்கின்றனர்.

நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் அதிகம் பாதித்தது இதில் மண்சரிவு ,வெள்ளம் உள்ளிட்ட ஏனைய அனர்த்தங்களால் பூக்கள் அழிவடைந்தது இதனால் பூக்களின்  வரத்தும் குறைவால் கடந்த ஆண்டை காட்டிலும் கடுமையாக குறைந்துள்ளது இதன் காரணமாக பூக்கள் மற்றும் பூங்கொத்துக்களின்  விலை அதிகரித்து உள்ளது இதனால் விற்பனை சற்று இம்முறை  மந்தமாகவே உள்ளது.

குறிப்பாக ஜனவரி மாதம் முழுவதும் நுவரெலியாவில் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர்காலப் பருவநிலை மாற்றம் காரணமாக ரோஜா உற்பத்தி சுமார் 35% முதல் 45% வரை சரிந்துள்ளது எனவும் விலை உயர்ந்திருந்தாலும், இந்த ஆண்டு விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மலையகத்தில் இருந்து புகையிரம்  இயங்காது உள்ளமையால் தலைநகர் உள்ளிட்ட ஏனைய இடங்களுக்கு பூக்களை ஏற்றுமதி செய்துகொள்ள முடியாத நிலையும் உள்ளது இந்த ஆண்டு உற்பத்தி குறைவு மற்றும் அதிகத் தேவை காரணமாகவே ரோஜா பூக்களின் விலை வரலாறு காணாத நிலையை எட்டியுள்ளது.

கூடுதலாக தற்போது  செயற்கை மலர்களைப் பரிசளிக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் இதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது எனவும்  “மொத்த விலையில் பூக்களை வாங்கி வந்துள்ளோம், ஆனால் சில்லறை விலையில் மக்கள் வாங்கத் தயங்குகிறார்கள் இன்று முழுமையாக விற்பனை ஆகவில்லை என்றால் பூக்கள் வீணாகிவிடும்” எனவும் கவலை தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.