செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரச சேவையில் 73,000 பேர் இணைத்துக்கொள்ளப்படுவர் | ஜனாதிபதி அறிவிப்பு

அரச சேவையில் 73,000 பேர் இணைத்துக்கொள்ளப்படுவர் | ஜனாதிபதி அறிவிப்பு

1 minutes read

இலங்கையின் அரச சேவைக்கு 73 ஆயிரம் பேரை உள்வாங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று (27) நடைபெற்ற ஜனாதிபதி தலைமையிலான ‘ஹிமிகம’ பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் 23 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி காவல்துறைக்கு 10,000 பேரை இணைத்துக்கொள்ள இருப்பதாகவும்  தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளம்

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, வறுமையை ஒழிக்க வேண்டும். வறுமை என்பது சமூக அவலமாகும். பொருளாதாரத்தின் நன்மைகள் மக்களை சென்றடைய வேண்டும்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தோம். இந்த வருட சம்பள அதிகரிப்பிற்கு 11 000 கோடி ஒதுக்கியுள்ளோம்.

டித்வாவிற்காக மேலும் 50000 கோடி ரூபா ஒதுக்கினோம். இழப்பீடு வழங்கும் தொகைகளை அதிகரித்தோம். இதற்காக பணம் அச்சிடவில்லை.

திறைசேரியில் இருக்கும் நிதியே பயன்படுத்தப்பட்டன. திறைசேரிக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து பணத்தையும் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” என குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.