செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கல்வித் துறை நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு | அரசாங்கம்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கல்வித் துறை நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு | அரசாங்கம்

1 minutes read

நாட்டைத் தாக்கிய டித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட பொதுக் கல்வித் துறை சார்ந்த நிறுவனங்களை உடனடியாக மீள்புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு நாட்டைத் தாக்கிய தித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட பொதுக் கல்வித் துறை சார்ந்த நிறுவனங்களை உடனடியாக யதார்த்த நிலைக்குக் கொண்டு வர வேண்டியுள்ளது. அதன்கீழ், நாட்டின் 9 மாகாணங்களிலுமுள்ள 150 தேசிய பாடசாலைகளைப் புனரமைப்பதற்காக 1,988.83 மில்லியன் ரூபாவும், 7 தேசிய கல்வியியல் கல்லூரிகளைப் புனரமைப்பதற்காக 285.40 மில்லியன் ரூபாவும் என மொத்தம் 2,274.23 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக, அதிக சரிவுகளைக் கொண்ட பகுதிகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்களின் மண்சரிவு அபாயத்தை நீக்குவதற்காக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வழங்கப்படும் அறிக்கைகள் மற்றும் திட்டவரைபுகளின் அடிப்படையில் அவசியமான கட்டமைப்புகளை நிர்மாணிக்க வேண்டியுள்ளது.

அதற்கமைய, குறித்த புனரமைப்புப் பணிகளை விரைவாக முன்னெடுப்பதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவைக் கருத்திற்கொண்டு, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டு நிதியைப் பயன்படுத்தி, இப்புனரமைப்புப் பணிகளுக்கானத் தேவையான நிதி ஒதுக்கீடுகளைச் செய்து கொடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.