செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பில் 20 ஏக்கரில் சிறைக்கைதிகளினால் செய்கை பண்ணிய நெற்செய்கையின் அறுவடை

மட்டக்களப்பில் 20 ஏக்கரில் சிறைக்கைதிகளினால் செய்கை பண்ணிய நெற்செய்கையின் அறுவடை

0 minutes read

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகளினால் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கையின் அறுவடை விழா இன்று வியாழக்கிழமை (05)  காலை சிறைச்சாலை அத்தியட்சகர் அசித குணதிலக தலைமையில் நடைபெற்றது.

சிறைச்சாலைக்குச் சொந்தமான திருப்பெருந்துறையிலுள்ள திறந்த வெளிச்சிறைச்சாலை காணியில் சுமார் 20  ஏக்கர் நிலப்பரப்பில் இவ் வேளான்மை செய்கை பண்ணப்பட்டிருந்தது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம்  விதைப்புச் செய்யப்பட்ட இச்செய்கையின் மூலம் ஏக்கர் ஒன்றிற்கு 15 மூடைகள் எதிர்பார்க்கப்படுவதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.

இயற்கை முறையில் செய்கை பண்ணப்பட்டிருந்த குறித்த நெற்செய்கை சிறந்த விளைச்சலைத் தந்திருப்பதாக சிறைச்சாலை அத்தியட்சகர்  தெரிவித்தார்.

பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து இவ்வேளான்மை அறுவடை விழா இடம் பெற்றது.

சிறைச்சாலை பிரதம ஜெயிலர் எஸ்.ரத்நாயக்கா உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் மாவட்ட கமத்தொழில் அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள்,மதத்தலைவர்கள்  உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.